உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி பருத்தித்துறை நகர சபையில் தீர்மானம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தால் கொண்டு வரப்படவுள்ளதாகக் கூறப்படும் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


நகர சபை அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து தவிசாளர் முன்வைத்த குறித்த தீர்மானம் 12 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.


தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் குறித்த தீர்மானத்திலிருந்து விலகியிருந்தனர். மொத்தம் 15 உறுப்பினர்களில் ஒருவரோ இன்றைய அமர்வில் கலந்துகொள்ளவில்லை.இதேவேளை, இன்றைய அமர்வில் முதலாவது கடந்த கூட்டத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டு, தேவையான திருத்தங்களுடன் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து குடத்தனை வலிக்கண்டி, பருத்தித்துறை முனை நடராசா அரங்கு உள்ளிட்ட நகர சபைக்கு சொந்தமான காணிகளை நிலஅளவீடு செய்து எல்லைப்படுத்துதல், சபை நடவடிக்கைகளுக்கான நிதி அனுமதிகளை வழங்குதல், மலக் கழிவு உறிஞ்சும் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்தல், வாழைத்தண்டு உள்ளிட்ட கழிவுகளை துகளாக்கும் இயந்திரம் ஒன்றை வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0