உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வெளிவிவகார அமைச்சர் நாளை ஜேர்மனிக்கு பயணம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை வியாழக்கிழமை ஜேர்மனிக்குப் பயணம் செய்யவுள்ளார்.

ஜேர்மன் – ஆசிய பசிபிக் வணிக சங்கம் மற்றும் அதன் பிரெமன் அத்தியாயம் விடுத்த விசேட அழைப்பின் பேரில் இந்த விஜயம் அமையவுள்ளது.

ஆசிய பசிபிக் வணிக சங்கத்தின் பிரெமன் அத்தியாயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், ஆசியப் பிராந்தியத்தின் சார்பில் கௌரவ விருந்தினராகவும், முதன்மைப் பேச்சாளராகவும் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜேர்மனிய அரசின் உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளார். குறிப்பாக, வர்த்தக மேம்பாடு மற்றும் இலங்கையர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக இச்சந்திப்புகளில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

இலங்கையில் தற்போதுள்ள பொருளாதாரச் சூழல் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஜேர்மனிய வர்த்தகச் சமூகத்தினருக்கு விளக்கும் வகையில் பல தொடர் கூட்டங்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார் என்று வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0