உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு; நுகர்வோர் பெரும் சிரமம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

நாடளாவிய ரீதியில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால் அம்பாறை மாவட்டத்திலும் அதன் தாக்கத்தை அவதானிக்க முடிகின்றது.

கடந்த 4 நாட்களுக்கு மேலாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு விற்பனை முகவர்களிடம் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோர்கள் பெற முடியாமல் சிரமப்படுவதை காண முடிகின்றது.

மேலும் எந்தவொரு சமையல் எரிவாயு சிலிண்டர்களும் சில தினங்கள் விநியோகப்படாமையினால் பல பகுதிகளிலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு உணரப்பட்டுள்ளது.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் லாஃப் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், காரைதீவு, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, கல்முனை, நாவிதன்வெளி, மருதமுனை, பெரியநீலாவணை பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களின் முன்பாக மணிக்கணக்கில் காத்திருந்து பொதுமக்கள் சமையல் எரிவாயுவை பெற்றுச் செல்கின்றனர்.

அதிலும் எதிர்வரும் நாட்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவும் என பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் பீதியடைந்து சிலிண்டர்களைக் கொள்வனவு செய்ய நீண்ட நேரம் காத்திருந்து பெற்றுச் செல்கின்றனர்.

இவ்வாறு காத்திருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலையும் தற்போது நிலவுகிறது. விநியோகம் குறைவாக இருப்பதாலும் தேவை அதிகமாக இருப்பதாலும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது என வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக கடந்த சில தினங்களில் இருந்து இந்த தட்டுப்பாட்டு நிலைமை காணப்படுவதுடன் நகரத்தில் உள்ள அநேகமான விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டர்கள் முற்றாக தீர்ந்துள்ளது. நிறுவனத்தில் இருந்து வருகின்ற லொறிகள் வரவில்லை என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளதுடன் ஒரு சில நாட்களில் அது சீராகும் என தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் வழமையை விடக் குறைந்தளவு சிலிண்டர்களே விநியோகிக்கப்படுவதாக விநியோகத்தர்கள் கூறுகிறார்கள். இன்னும் சில இடங்களில் விநியோகம் தாமதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் இன்னும் விநியோகிக்கப்படாமல் முடங்கியுள்ளதாகத் தெரியவருகிறது. இரண்டு வகை சமையல் எரிவாயுக்களில் ஒன்றை கூட கொள்வனவு செய்ய முடியாது நுகர்வோரும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சில வர்த்தக நிலையங்களில் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் 05 கிலோ கிராம் சிலிண்டர் 02.3 கிலோ கிராம் சிலிண்டர் கையிருப்பில் இருப்பதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தவிர லிட்ரோ நிறுவனம் ஏற்கனவே 3 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிவாயு பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்ற நிலையில் நாட்டில் நிலவும் எரிவாயு பற்றாக்குறை காரணமாக 3900 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயுவுடனான கப்பல் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை (23) நாட்டை வந்தடைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இன்று(25) மற்றும் 28 ஆம் திகதி 7600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு இரண்டு கப்பல்கள் நாட்டுக்கு வரவுள்ளதாக மற்றுமொரு தகவலும் வெளியாகியுள்ளது.

எனவே கடந்த சில நாட்களாக லிட்ரோ, லாஃப் இரு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் நோன்பு காலத்தில் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0