உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஜனநாயகத்தை பாதுகாக்க கைகோர்க்கும் எதிர்க்கட்சிகள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

நாட்டில் பல்லினக் கட்சி முறையிலான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக, சிதறிக் கிடக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு எதிர்காலக் கூட்டுப் பொறிமுறை குறித்து ஆராய்ந்தனர்.

தற்போதைய அரசின் பலமான ஆதிக்கத்திற்கு மத்தியில், பலவீனமடைந்துள்ள எதிர்க்கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, ஜனநாயக ரீதியிலான சமநிலையை உருவாக்குவதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாகும்.

நாட்டில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இயங்க வேண்டும் என்றும், அதற்காக அனைத்துத் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் மகாநாயக்க தேரர்கள் வழங்கிய ஆலோசனையைத் தொடர்ந்தே இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தப் புதிய கூட்டணி முயற்சிகளின் ஒரு கட்டமாக, ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன் ஆரம்பகட்டப் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன.

இன்றைய சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா,
“இலங்கையின் பல்லினக் கட்சி முறையை அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. கொள்கை ரீதியாக மாறுபட்டிருந்தாலும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.” – என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், உதய கம்மன்பில, மஹிந்த அமரவீர, மஹிந்த அமரவீர, சாகல ரத்நாயக்க, தலதா அத்துகோரள, வஜிர அபேவர்தன உள்ளிட்ட சிரேஷ்ட அரசியல்வாதிகள் பலரும் பங்கேற்றனர்.

தற்போதைய அரசியல் சூழலில், அரசுக்கு நிகரான ஒரு பலமான மாற்று சக்தியாகத் திகழ இந்த ‘எதிர்க்கட்சிகளின் கூட்டு’ அமையும் என்று சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

57 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

53 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0