உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட திட்டமிடல் கூட்டம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
60 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளுக்காக இந்த ஆண்டு 733 திட்டங்களுக்கு 9739 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கான வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துமாறும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துநெத்தி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட திட்டமிடல் கூட்டம் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்கப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துநெத்தி கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், கிழக்கு மாகாண சபையின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மத்திய அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீடுகள் மாகாணசபையினால் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள், வெளிநாட்டு நிதிகள் என பல்வேறு நிதி திட்டங்கள் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முக்கியமாக முந்தனையாறு திட்டம் மற்றும் கிரான்புலிபாய்ந்தகல் வீதியூடான பாலம் அமைத்தல் உட்பட மாவட்டத்தில் துறைசார்ந்து முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அத்துடன் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் எதிர்கொண்ட பாதிப்புகள் குறித்தும் அதற்கான தீர்வினையும் விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் இதன்போது கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் தமது அறுவடை செய்த நெல்லை காயவைப்பதற்கு எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்காலத்தில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்தி காய வைத்து விற்பனை செய்யும் வகையில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் நெல் காயவைக்கும் இயந்திரங்களையும், களஞ்சியசாலைகளையும் அமைப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டு பணிப்புரைகள் விடுக்கப்பட்டன.

அத்துடன் கடந்த சில காலங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அனுமதிப்பத்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ளதனால் மண் விலை அதிகரித்துள்ள நிலையில் அதனை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மண் தொடர்பிலான தீர்மானங்களை முன்னெடுப்பது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளமை தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதுடன் இந்த பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் வனஜீவராசிகள் திணைக்களம் நடவடிக்கை முன்னெடுக்கவேண்டும் என்ற பணிப்புரைகள் விடுக்கப்பட்டதுடன் அதற்கு தேவையான உதவிகளை அமைச்சின் ஊடாக வழங்கவும் வாகன தேவைகளை பிரதேச சபைகள் ஊடாகவும் வாடகை அடிப்படையிலும் பெற்றுக்கொள்ளும் வகையில் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

இதன்போது மாவட்டத்தில் இந்த ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்களுக்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதன் காரணமாக திட்டங்களை விரைவுபடுத்தி முடிக்குமாறு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரினால் பணிப்புரைகள் வழங்கப்பட்டன.

இந்த கூட்டத்தின் நிறைவில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துநெத்தியினால் ஊடக சந்திப்பு ஒன்றும் நடாத்தப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

123 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0