உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மீற்றர் வட்டி பிரச்சினையால் முச்சக்கரவண்டி பறிப்பு; சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அதிரடி நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் மீற்றர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
மீற்றர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீற்றர் வட்டிக்கு பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்திற்கு மேலாக வட்டி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக வட்டி செலுத்தாத காரணத்தால் வட்டிக்கு பணத்தை கொடுத்தவர் நேற்றிரவு வட்டிக்கு பணத்தை பெற்றவரது 17 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியை கத்தியை வைத்து மிரட்டி பறித்து சென்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.நிதர்சன் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை குறித்த சந்தேகநபரை கைது செய்ததுடன் முச்சக்கர வண்டியையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பல பகுதிகளில் மீற்றர் வட்டி பிரச்சினை தலைவிரித்து ஆடுகின்ற நிலையில் ஏற்கனவே தற்கொலைகள், அச்சுறுத்தல் சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள் என்பன இடம்பெற்றுள்ளன.

இந்த சூழ்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தமிழ் பொறுப்பதிகாரி மீற்றர் வட்டி வன்முறை சம்பவம் குறித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவதை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தொலைபேசி கேபிள்களில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய இருவர் கைது.!

நுவரெலியா நகர எல்லைக்குள் இலங்கை டெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான தொலைபேசி இணைப்பு கேபிள்களை வெட்டி, அவற்றில் உள்ள செப்பு கம்பிகளை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர்,…

53 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

51 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

59 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

33 0 0