மார்ச் ஒன்று முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை.!
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கிணங்க, “போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை” நடைமுறைப்படுத்துவதற்கான அரச நிர்வாகச் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, 2026 மார்ச் 1 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தை “போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக” பிரகடனப்படுத்த முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கைப் பேரவை தீர்மானித்துள்ளது.
இன்றைய (24) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு துறைமுகங்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.