கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு வழமைக்கு திரும்பியது.!
கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடுமையான சமையல் எரிவாயு தட்டுப்பாடு தற்போது நீங்கியுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை முதல் நகரின் பல பகுதிகளுக்கு எரிவாயு ஏற்றிய வாகனங்கள் வருகை தந்துள்ளன.
இதன் மூலம் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இன்றி எளிதாக எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதை காண முடிந்தது.நேற்று வரை எரிவாயு கிடைக்காமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாக கூறிய பொதுமக்கள், தற்போது தடையின்றி விநியோகம் நடைபெறுவது தங்களுக்கு நிம்மதியளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
தட்டுப்பாட்டை நீக்கி விநியோகத்தைசீரமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பலனளித்துள்ளதால், உணவகங்களும் குடும்பங்களும் தமது அன்றாட சமையல் பணிகளை மீண்டும் தடையின்றி ஆரம்பித்துள்ளன.தற்போதைய நிலையில் சந்தையில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பில் இருப்பதாகவும், விநியோக அமைப்பு சீராக செயல்பட்டு வருவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.