உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு புதிய கணினி மையம் – விமானப்படை கையளிப்பு!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இலங்கை விமானப்படை தனது 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு புதிய கணினி மையம் ஒன்றை அமைத்து வழங்கியுள்ளது.விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ், விமானப்படையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் முழுமையாக உபகரணங்கள் பொருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப கணினி மையம் நேற்று பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.


மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பக் கற்றல் சூழலை உருவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய குளிரூட்டப்பட்ட கணினி ஆய்வகத்தில் 15 மேசைக்கணினிகள், இடையறாத மின்விநியோக அமைப்புகள் மற்றும் இணைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இதன் மூலம் மாணவர்கள் நவீன கணினி வசதிகளை பயன்படுத்தி தங்கள் கல்வித் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு பெறுகின்றனர்.


75ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, நாட்டின் பல கிராமப்புறப் பாடசாலைகளிலும் இதுபோன்ற கணினி மையங்களை அமைக்கும் திட்டத்தை விமானப்படை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.இந்தத் திட்டத்திற்கு தேவையான கணினி மேசைகள் மற்றும் நாற்காலிகளை மட்டக்களப்பு ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளது.


கணினி மையத் திறப்பு நிகழ்வில் விமானப்படை மின் மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் அசித ஹெட்டி ஆராச்சி, தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் குரூப் கேப்டன் சானக சூரியஆராச்சி, விமானப்படை அதிகாரிகள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

44 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0