உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நாடு முழுவதும் தீவிரமடையும் டெங்கு நோய்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

இலங்கையில் இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுக்குள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் இன்று வரை நாடு முழுவதும் 12 ஆயிரத்து 165 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களை விடக் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மாத்தறை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் டெங்கு நோய்ப் பரவல் தீவிரமடைந்துள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, அதனைத் தடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சுகாதார அதிகாரிகள் மற்றும் மாநகர சபைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதுடன், நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பதற்கும் அறிவுறுத்தல்களை வழங்கவுள்ளனர்.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தத் தங்கள் வீடுகள் மற்றும் சூழலைத் தூய்மையாக வைத்திருக்குமாறும், நீர் தேங்கி நிற்கும் இடங்களை அகற்றுமாறும் சுகாதாரத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அம்பாறை ஊடகவியலாளர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம்; அரச அதிபரிடம் சிலோன் மீடியா போரம் அவசர கோரிக்கை.!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இலவச வீட்டுத்திட்டம் ஒன்றினை அமைத்துத் தருமாறு சிலோன் மீடியா போரம் அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம்…

44 0 0
இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

54 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

28 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

62 0 0