உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பழுதடைந்த சோள விதைகள்; சட்டவிரோத சத்துணவு தயாரிப்பதற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
57 பார்வைகள்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் உரிய அனுமதியின்றி வீதி மற்றும் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் பழுதடைந்த மற்றும் பூஞ்சைகள் நிறைந்த பல ஆயிரம் டொன் சோள விதைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மன்னார் சுகாதார துறையினர் குறித்த களஞ்சியசாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மன்னார் நடுக்குடா பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக அதிகளவான சோள விதைகள் உலர விடப்பட்டுள்ளதாக பொது மக்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற சோள விதைகள் உலரவிடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரம் குறித்த களஞ்சியசாலைக்கோ அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கோ எந்த ஒரு சட்ட அனுமதியோ அல்லது சுகாதார மருத்துவ சான்றிதலோ பெறப்படவில்லை என்றும் முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரம் இவ்வளவு தொகை பழுதடைந்த சோள விதைகள் எவ்வாறு எந்தவொரு அனுமதியும் இன்றி மன்னார் மாவட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டது என்பது பற்றியும் இந்த விதைகளை எதற்காக கொண்டு வந்தார்கள் என்பது தொடர்பில் மேலதிக விபரங்களை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆய்வு செய்து வருகின்றது.

குறித்த சோள விதைகள் மிகவும் தரம் குறைந்த பழுதடைந்த அதே நேரம் பூஞ்சணம் பிடித்த நிலையில் உரிய சுகாதார வழிகாட்டலை பின்பற்றாது உலர விடப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் முதல் கட்டமாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதே நேரம் குறித்த சோள விதைகளை பயன்படுத்தி சட்டவிரோத தரமற்ற சத்துணவு பொருள் ஒன்றை தயாரிப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்வதற்கான செயற்பாடுகள் இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த விதைகளை விலங்குணவாக பயன்படுத்தும் வகையில் கூட எந்த ஒரு அனுமதியும் பெறப்படாத நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று அனைத்து சோள விதைகளையும் அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

56 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

69 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

81 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

72 0 0