உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் இரண்டாவது ஹிப்ழ் மத்ரஸா ஆரம்பித்து வைப்பு.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
77 பார்வைகள்

மன்னார், தாராபுரம் ஹுஸைனியா பள்ளிவாயலில் புதிய ஹிப்ழ் (மனன பிரிவு) மத்ரஸா அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியுதீன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) ஆரம்பித்து வைத்தார்.

மாணவர்களின் நலன் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, “இக்ராஹ் – ஓதுவீராக” என்ற தொனிப்பொருளில் இஸ்லாமிய நெறிமுறைகள், கல்வி விழுமியங்கள் மற்றும் சமூக ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கலாச்சாரப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த கல்வித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வு, இவ்வருடத்திற்கான 2ஆவது கல்விசார் நிகழ்வாக ஆரம்பிக்கப்பட்டு, மாணவர்களிடையே கல்வி விழிப்புணர்வு, ஒழுக்கம் மற்றும் சமூக பொறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிகழ்வில், ஹூஸைனியா பள்ளிவாயலின் தலைவரும் முன்னாள் மாகாண இளைஞர் பணிப்பாளருமான என்.எம்.முனவ்பர், மன்னார் மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை தலைவர் மௌலவி அஸீம், மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற சபை தவிசாளர், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்டோருடன் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வை தொடர்ந்து விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு திறக்கின்ற இப்தார் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

56 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

69 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

81 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

72 0 0