உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
76 பார்வைகள்

மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்களில் தெரிவு செய்யப்பட்ட 36 மீனவர்களுக்கு மீன்பிடி வலை தொகுதி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (19) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தில் இடம்பெற்றது.

மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் மீனவர்களுக்கு உதவித் திட்டங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மீனவர்களுக்கான புதிய வலை உபகரணங்கள் வழங்கும்போது அவை கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதி பெற்றவையாக இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புயல் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ஐந்து பேர் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு சேதங்கள் கணக்கிடப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மன்னார் பகுதியில் சமீப காலமாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டைனமைட் (வெடிபொருள்) பயன்படுத்தி மீன்பிடித்த இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று இரண்டு நபர்கள் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு இந்திய இழுவைப் படகுகள் 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

சுற்றுச்சூழல் மற்றும் மீன் வளப் பாதுகாப்பு கருதி உழவு இயந்திரம் மூலம் கரைவலை இழுப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இது குறித்து மீனவர் சங்கங்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் பாரம்பரிய முறையில் கைகளால் வலை இழுக்க அனுமதி உண்டு. ஆனால் இயந்திரங்கள் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது திணைக்களம் கடுமையான நடவடிக்கை எடுக்கும். இது குறித்து மீனவ சமூகத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அதிகாரி கேட்டுக்கொண்டார்.

குறித்த நிகழ்வில் மெசிடோ நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 36 மீனவர்களுக்கு குறித்த வலைத்தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் மஹிந்த கஹந்தகம கைது.!

கொழும்பு மாநகர சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உட்பட இருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

56 0 0
இலங்கை செய்திகள்

வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு.!

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான…

69 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

81 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

72 0 0