சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!
மட்டக்களப்பு காத்தான்குடியிலிருந்து சென்ற பேருந்து புனானையில் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (18) காலை மட்டக்களப்பு வாழைச்சேனை புனானை பகுதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு பொலன்னறுவை வீதியில் காத்தான்குடியிலிருந்து பொலனறுவை நோக்கி பயணித்த பேருந்தும் பொலநறுவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த பாரவூர்தியும் புனானை பகுதியில் வைத்து சற்றுமுன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் இரு வாகனகளும் சேதமடைந்துள்ளதுடன் எவருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



