உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பில் பெய்துவரும் கடும் மழை; தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
80 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் தென்கிழக்கே நிலவிய சுழற்சியானது தாழ்வுப் பகுதியாகி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக தொடர்ச்சியாக மழையினை எதிர்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

நேற்று மாலை தொடக்கம் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நிலைமைகள் ஏற்படும் நிலைமை காணப்படுகின்றது.

குறிப்பாக தாழ்நிலங்கள் வெள்ள நீரினால் மூழ்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் நடைபெற்றுவருவதன் காரணமாக விவசாயிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதையும் காணமுடிகின்றது.

அறுவடை செயற்பாடுகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதுடன் அறுவடை செய்தவர்கள் நெல்லை பாதுகாப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

123 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0