உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சிவகார்த்திகேயன் புதிய படத்திற்கு நாயகியாகும் பாக்யஸ்ரீ.!

சினிமா 8 மாதங்கள் முன்
100 பார்வைகள்

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் நாயகியாக பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்.
முன்னதாக வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் திட்டமிட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் அந்த படம் தயாராக நீண்ட நாட்களாக இருப்பதால், அதோடு இணைந்து இன்னும் இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.


அவற்றில் ஒன்றை ‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ளார். இப்படத்துக்கான ப்ரோமோ படப்பிடிப்பு மதுரையில் முடிந்துவிட்டது. இப்படத்தை சிவகார்த்திகேயனே தயாரிக்கவுள்ளார்.இதில் நாயகியாக நடிக்க பாக்யஸ்ரீ போஸிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவர் அறிமுகமாகும் நேரடி தமிழ் படம் ஆகும் என்று கூறப்படுகிறது. ‘காந்தா’ படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


முழுக்க கிராமத்து பின்னணியில் நடைபெறும் கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றவுள்ளார்.சிவகார்த்திகேயனின் பிறந்த நாளான பெப்ரவரி 17-ம் திகதியில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

67 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

61 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

83 0 0