உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
65 பார்வைகள்

ஓட்டமாவடி- திருகோணமலை வீதியில் காயங்கேணி பாலத்தில் சற்று முன்னர் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளது.

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாகப் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயங்களுக்குள்ளான அனைவரும் இரு நோயாளர் காவுவண்டிகளின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இப்பாதை வழியே பயணித்த இரு வெளிநாட்டவர்கள் தங்களிடமிருந்த முதலுதவி உபகரணங்களைக் கொண்டு இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதற்கான முதலுதவி சிகிச்சைகளை உடனடியாக மேற்கொண்டிருந்தமை நெகிழ்ச்சியான சம்பவமாக இருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐஸ் போ**தைப்பொருளுடன் இளைஞன் கைது.!

4 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் மீது சக கைதிகள் தாக்குதல்.!

சவூதி அரேபியாவில் தற்போது மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டுள்ளார் எனவும், அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் மிகவும் கவலைக்குரிய…

55 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

123 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

77 0 0