அஜித் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு நேரில் சந்திப்பு.!
டுபாயில் நடைபெற்ற ஆசிய லீ மேன்ஸ் கார் ரேஸிங் போட்டியில் தமிழ் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். இந்த போட்டியைப் பின்தொடர்ந்து, பல தமிழ் திரையுலக பிரபலங்கள் அஜித்தை நேரில் சந்திக்க டுபாய்க்கு வந்தனர்.
சமீபத்தில் இசையமைப்பாளர்கள் அனிருத், ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திகேயன், சிலம்பரசன், மாதவன் மற்றும் நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா ஆகியோர் அஜித்தை நேரில் சந்தித்தனர்.இதனையடுத்து, இயக்குனர் வெங்கட் பிரபு அவரை சந்தித்துள்ளார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த ‘மங்காத்தா’ படம் கடந்த 23ஆம் திகதி மீள்விருத்தி வெளியீடு செய்யப்பட்டது. படத்தின் மீள்விருத்தி வெளியீடு மூலம் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.