தங்கம் முறைகேடு வழக்கு: நடிகர் ஜெயராமுக்கு அழைப்பாணை.!
சபரிமலை தங்கம் கொள்ளை தொடர்பான வழக்கில், மலையாளத் திரைப்பட நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கப் பிரிவினர் விசாரணைக்காக அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
இதில், உன்னிகிருஷ்ணன் போற்றி மற்றும் தேவசம் சபை முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு உட்பட 12 பேர் சிறப்பு விசாரணைக் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொச்சி அமலாக்கப் பிரிவும் தனித்துவமாக விசாரணையை நடாத்தி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முராரி பாபுவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றியிட மீண்டும் விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.