உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

94-வது வயதில் திரைப்படத்தை இயக்கத்தில் – சிங்கீதம் சீனிவாச ராவ்!

சினிமா 8 மாதங்கள் முன்
52 பார்வைகள்

பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் பல படங்களை இயக்கி இருக்கிறார்.தமிழில் ராஜபார்வை, பேசும் படம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட சில படங்களை இயக்கியுள்ளார். இவருக்கு நடிகர் கமல்ஹாசன், ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற பெயரில் ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் நடத்தினார். இந்நிலையில், சிங்கீதம் சீனிவாச ராவ் தனது 61-வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

அதை தயாரிக்க இருப்பதாக பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அறிவித்துள்ளது. இதன் தொடக்கவிழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இது, இளம் தலைமுறையின் காதலைப் பேசும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சிங்கீதம் சீனிவாச ராவ் 94-வது வயதில் திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைப்பில், மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா…

67 0 0
சினிமா

உருவக் கேலிக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடி!

சமூக வலைதளங்களில் தனது தோற்றம் மற்றும் நிறம் குறித்துத் தொடர்ந்து பரப்பப்படும் உருவக் கேலி விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள…

61 0 0
சினிமா

தனது மணவாழ்க்கை குறித்து கருத்து வெளியிட்ட விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள “ரணபாலி” திரைப்படம் எதிர்வரும் 16ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. இதனையொட்டி திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு…

67 0 0
சினிமா

சினிமா பின்புலம் இல்லாமல் சாதித்தோம்: ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

திரையுலகில் எந்தவித பின்னணியும் இன்றி உழைப்பால் மட்டுமே முன்னணி நடிகர்களாக உயர்ந்திருப்பதாக ரசிகர் மன்றக் கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தனது ரசிகர்…

83 0 0