உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
82 பார்வைகள்

சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களை சூட்சுமமாக கடத்தி வந்த சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியின் ஊடாக கொழும்பில் இருந்து கல்முனை வழியாக சம்மாந்துறை பகுதிக்கு சென்ற அதிசொகுசு பேருந்து ஒன்றில் இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஜயரட்ணவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய நேற்று வியாழக்கிழமை (29) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு – கல்முனை அதிசொகுசு பேருந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அக்கரைப்பற்று பகுதியை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான குடும்பஸ்தர் பயணப் பை ஒன்றில் சூட்சுமமாக கொண்டு வந்த 4 கோடி ரூபாய் பெறுமதியான பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் கொண்டு வந்த போதைப்பொருட்களில் குஷ், கேரளா கஞ்சா, ஐஸ், ஹெரோயின் உட்பட 4 வகையான போதைப்பொருட்கள், 2 தொலைபேசிகள், ஒரு தொகை பணம், மா டின் என்பன நீலாவணை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஜயரட்ண உட்பட பொலிஸ் சார்ஜெண்டுகளான ஏ.எல்.எம் தௌபீக் ( 2223) திலகரட்ண(37163) ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

மேலும் இச் சம்பவத்தில் கைதான சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் போது சுமார் 20 முதல் 30 வரையிலான 6 போதைப்பொருள் சந்தேக நபர்கள் சம்மாந்துறை உட்பட ஏனைய பொலிஸ் நிலைய பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

இந் நடவடிக்கையில் கைதான 6 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

மேலும், குறித்த சோதனை நடவடிக்கையில் பெருமளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டமையை தொடர்ந்து கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு சென்று கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் உட்பட நீலாவணை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஏ.ஜயரட்ண உட்பட பொலிஸ் சார்ஜென்டுகளான ஏ.எல்.எம் தௌபீக் ( 2223) திலகரட்ண(37163) உட்பட இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இதர பொலிஸ் உத்தியோகத்தர்களை பாராட்டியதுடன் போதைப்பொருள் ஒழிப்பு திட்டம் குறித்தும் ஆலோசனை வழங்கி சென்றார்.

மேலும் கைதான பிரதான சந்தேக நபரை இன்று(30) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக முன்னிலைப்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது தவிர பெரிய நீலாவணை பொலிஸாரின் கொழும்பு – கல்முனை பேருந்தில் அதிரடியான சோதனை தொடக்கம் சம்மாந்துறை வரையான கைது நடவடிக்கையினால் போதைப்பொருள் வலையமைப்பு பிடிக்கப்பட்டு பல்வேறு வகையிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

82 0 0