கல்கி படத்தில் தீபிகாவுக்கு பதிலாக நடிக்கப் போகும் நடிகை உறுதியாக வெளிவந்த தகவல்..!
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துத் 2024ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கல்கி 2898 ஏ.டி. பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் எதிர்மறை பாத்திரத்தில் நடித்திருந்தார்.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கல்கி – பாகம் 2 தயாரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென நடிகை தீபிகா படுகோன் இப்படத்திலிருந்து விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.தீபிகா படுகோன் விலக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நடித்த சுமதி என்ற பாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது.
இதற்கிடையில், ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல நடிகைகளின் பெயர்கள் பரவலாக பேசப்பட்டன.ஆனால், தற்போதைய உறுதியான தகவல்களின்படி, கல்கி – பாகம் 2 திரைப்படத்தில் சுமதி பாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் திரைப்படக் குழுவினரால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
