உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
59 பார்வைகள்

அம்பாறை – காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலுள்ள சுவாமி அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்தவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த காரைதீவு – 12 பிரதான வீதியை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க நபர் ஆவார்.

காதல் விவகாரம் காரணமாக இவர் உயிர்மாய்த்திருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவரின் மரணம் தொடர்பில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் பணிப்புரைக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, தூக்கில் தொங்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு, மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு சடலம் உறவினர்களிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

82 0 0