கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.!
கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் சமூக சேவைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பாடசாலை மாணவர்களின் கல்வி தேவைகளை கருத்திற்கொண்டு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (16) நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் அனுசரணையில், நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலய அதிபர் ML. பதியுதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வு ரஹ்மத் பவுண்டேசனின் நற்பிட்டிமுனை இணைப்பாளர்களான பிரின்ஸ் பாலர் பாடசாலை அதிபர் MM.ரியாஸ் மற்றும் MI.நிறோஸ் (JP) அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன்
நிகழ்வின் போது, அவர் மாணவர்களை நோக்கி ஊக்கமளிக்கும் உரையாற்றியதுடன், கல்வி என்பது ஒரு சமூகத்தின் நிலைத்த முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும் என வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தனது பொற்கரங்களால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
மாணவர்களின் கல்வி பயணத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவது ரஹ்மத் பவுண்டேசனின் முதன்மை நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள், சமூக முக்கியஸ்தர்கள், பெருந்திரளான பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
அனைவரின் பங்களிப்புடனும் ஒத்துழைப்புடனும் இந்நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றது.











