உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
76 பார்வைகள்

இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான உறுதி மொழி சத்தியப் பிரமாணம் மாவட்ட இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது தேசிய கொடியேற்றல் மற்றும் மங்கள விளக்கேற்றல் அறநெறி கீதம் இசைத்தலுடன் ஆரம்பமாகியது.

அதனை தொடந்து உறுதி மொழி எடுத்தல் மற்றும் அதிதிகள் உரைகள் என்பன இடம்பெற்றதுடன் அறநெறி ஆசிரியர்களுக்கான குறிப்பேடுகளில் கையோப்பம் இடும் நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மாவட்ட கலாச்சாரப் பிரிவின் மாவட்ட உத்தியோத்தர் ஜெயராஜி மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் ரெட்ணம்.சுவாகர் மற்றும் மேலதிக மாவட்ட பதிவாளர் திரு.பிரதீப், திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர் A.மனோகரன், திருக்கோவில் பிரதேச இந்து சமய கலாச்சார உத்தியோத்தர் திருமதி நிஷாந்தினி தேவராஜ் மற்றும் காணிப்பிரிவு உத்தியோத்தர் திரு.கோவிந்த சாமி மற்றும் ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.சனாதனன் மற்றும் பிரதேச செயலக உத்தியோத்தர்கள் அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

82 0 0