உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

விநாயகபுரம் மண்ணின் மைந்தன் சரிகமப பாடகர் சபேசன் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் மண்ணின் மைந்தன் சரிகமப பாடகர் திரு.S.சபேசன் அவர்களை வரவேற்கும் மற்றும் கௌரவிற்கும் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் இந்து இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் Thiraviyaraj Rasarethinam அவர்களின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.

இவ் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் ஆலயங்களின் அனுசரனையில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று மருதையடி பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் இடம்பெற்று பாடகர் சபேசன் அவர்கள் ஆலய நிர்வாகத்தினரினால் மாலை அணிவித்து வரவேற்பு ஆரம்பமாகி பின்னர் வாகன பவனியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் வரை அழைத்துவரப்பட்டு பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செலகத்தின் கலாச்சார மண்டபத்தில் பாடகர் சபேசன் அவர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னம் மற்றும் வாழ்த்துப்பா என்பன வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்பு, ஊடக குழுவினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் சபேசன் அவர்களின் தாய் தந்தையரும் குறித்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்களும் இந் நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0