உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு மையவாடி; பயனற்றுப் போகும் தற்காலிக தீர்வுகள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
24 பார்வைகள்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள மையவாடி அண்மையில் எற்பட்ட டித்வா புயல் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடும் காற்றுடன் கூடிய கடும் கடல் கொந்தளிப்பு காரணமாக தினமும் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றது.

இதனால் இம்மையவாடியில் மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது மக்களின் ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியான கடலரிப்பு காரணமாக மனித எச்சங்கள் தொடர்ச்சியாக வெளிப்பட ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான தகவல்கள் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர் போன்ற அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையேர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் ஆலோசனைக்கமைய உடனடியாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ. பர்ஹான் இடைவிடாது 4 நாட்களாக கனரக வாகனங்களின் உதவியுடன் கல் அணைகளை தற்காலிகமாக செய்து முடித்ததுடன் அப்பகுதி மக்களது பாராட்டையும் பெற்றுள்ளார்.

கடந்த காலங்களில் இம்மையவாடி இவ்வாறு கடலரிப்பிற்கு உள்ளான போதிலும் நிரந்திர தீர்வு எதுவும் மேற்கொள்ள முடியாதமையினால் தற்போது இவ்வாறான நிலைமை தோன்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக தடுப்பு அணைகளையும் தாண்டி கடலரிப்பு நிலை இங்கு உருவாகியிருப்பதால் ஆபத்தான நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பல எலும்புக்கூடு பகுதிகள் கபூர் தடயங்கள் மற்றும் மனித எச்சங்களாக கருதப்படும் பொருட்கள் கரையோரத்தில் சிதறிக் காணப்படுகின்றன.

இது தவிர மையவாடிக்கு அண்மையில் உள்ள விநாயகர் ஆலயம், காரைதீவு கரையோர பாதுகாப்பு காரியாலயம் போன்றன கடலரிப்புக்கு இலக்காகி உள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரச அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இதே வேளை மீனவர்களின் மீன்பிடி படகுகளும் வள்ளங்களும் நிறுத்த இடமின்றி வீதிக்கு அருகில் இழுத்து வைக்கப்பட்டுள்ளது.

கொங்கிறீட் வீதிகளும் கடலரிப்பில் உடைந்து கடலுடன் சங்கமித்துள்ளதுடன் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்கள் முற்றாக கடலரிப்புக்கு இலக்காகியுள்ளது இங்கு அவதானிக்க முடிகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

மாணவ, மாணவிகளிடம் அங்க சேட்டை; பொதுச் சுகாதார பரிசோதகரை கைது செய்ய பொலிஸார் வலைவீச்சு.!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் சேட்டை புரிந்த பொதுச்சுகாதார பரிசோதகரை (PHI)…

45 0 0
அம்பாறை செய்திகள்

போதைப்பொருளுடன் கைதான ஸ்பைடர் வுமன்.!

போதைப்பொருட்களை மிக நீண்ட காலமாக கடத்தி சூட்சுமமாக விற்பனை செய்து வந்த ஸ்பைடர் வுமன் (சிலந்தி பெண்) கால் உடைந்த நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

105 0 0
அம்பாறை செய்திகள்

பிரதேச சபை தொழில்நுட்ப உத்தியோகத்தர் கைது.!

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை…

81 0 0
அம்பாறை செய்திகள்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; பெண் உட்பட இருவர் அதிரடியாக கைது.!

அம்பாறை மாவட்டம் பக்கிஎல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவகிரிஆறு வனப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பாரிய கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸார் அதிரடியாக முற்றுகையிட்டுள்ளனர். இச்சம்பவத்துடன்…

77 0 0