உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

முதலை இழுத்துச் சென்ற நபரை தேடும் பணி தீவிரம்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
77 பார்வைகள்

முதலை இழுத்துச் சென்ற நபரை தேடும் பணி மீண்டும் இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்திற்கு உட்பட்ட ஆத்தியடிக்கட்டுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை நபர் ஒருவரை முதலை இழுத்து சென்றிருந்தது.

இந்நிலையில் அன்றைய தினம் இரவு 10 மணிவரை தேடுதல் மேற்கொண்ட நிலையில் நிறைவடைந்த தேடுதல் நடவடிக்கையானது இன்று (5) காலை மீண்டும் இரண்டாவது நாளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி அமைப்பு அல் உஷ்வா தற்காப்பு குழுவினர் கல்முனை ஆழ்கடல் சுழியோடிகள் அமைப்பு மற்றும் ஒலுவில் மீனவர் முதலானோர் இணைந்து தேடுதல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து உள்ளனர்.

இதுவரை சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை என களப் பணியில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.

முதலை இழுத்துச் சென்ற நபர் ஒலுவில் பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகிறது.

மக்கள் நீர்நிலைகளுக்கு அருகே செல்லும் போது அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

82 0 0