உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
52 பார்வைகள்

நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்படுகின்றது.

இன்றைய தினம்(01) புதுவருடப்பிறப்பை முன்னிட்டு ஏனைய இறைச்சி வகைகளுடன் கலப்பதற்காக இந்த நாய்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மேலும் ரெஜிபோம் பெட்டிகள் உட்பட சந்தேகத்திற்கிடமான பொருட்களும் காணப்படுகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளதுடன் ஆட்டிறைச்சி போன்று நாய் இறைச்சி விற்பனை செய்த சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும் எனும் நூல் வெளியீடு.!

2000 வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தின் வரலாறு ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்ட “பண்டைய வரலாற்றில் வீரமுனையும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் திருத்தலமும்”எனும் நூல்…

77 0 0
அம்பாறை செய்திகள்

யானையின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன்.!

அம்பாறை – மத்திய முகாம் 03 ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சோக…

93 0 0
அம்பாறை செய்திகள்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவிகளுக்கு பா**லியல் தொல்லை; விரிவுரையாளர் கைது.!

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆசிரிய பயிற்சி மாணவிகளுக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டி பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் வழங்கிவந்த 55 வயதுடைய விரிவுரையாளர்…

81 0 0
அம்பாறை செய்திகள்

ஐஸ் போ*தைப்பொருளுடன் இருவர் கைது.!

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள்…

81 0 0