உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞன் மீது தாக்குதல்

இலங்கை செய்திகள் 3 ஆண்டுகள் முன்
52 பார்வைகள்

திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞனை பிடித்து தாக்கி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று (26) பதிவாகியுள்ளது.

கிண்ணியா சூரங்கள் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய பாடசாலைக்குச் செல்லும் மாணவி ஒருவரை நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் காதலித்து திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றபோது சிறுமியின் பெற்றோர்கள் அழைத்துச் சென்ற இளைஞனை தாக்கிய நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த இளைஞர் சிறுமியை குருநாகல் பகுதிக்கு அழைத்துச் சென்ற போது அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குறித்த இளைஞரையும் சிறுமியையும் விசாரணை செய்தபோது சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சிறுமியின் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதைடுத்து இளைஞனை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது.

இதே வேளை பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து இளைஞரை கைது செய்து சட்ட வைத்திய அதிகாரியிடம் சோதனைக்காக கொண்டு சென்ற போது இளைஞருக்கு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

இந்நிலையில் குறித்த இளைஞரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் பொலிஸாடம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 14 வயது சிறுமியை சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இளைஞரை கைது செய்து பொலிஸ் கண்காணிப்பில் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0