உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

யாழில் வர்த்தக நிலையத்தில் திருட்டு: வாளுடன் கைதான இளைஞர்கள்

யாழ் செய்திகள் 3 ஆண்டுகள் முன்
26 பார்வைகள்

யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை திருடியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்று(12) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 20 – 30 வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட சில பொருட்களும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த வாளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரும் அச்சுவேலி காவல்துறையினரும் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்ததாக தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை இன்றைய தினம் (13) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 10ஆம் திகதி புத்தூர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு சிசிடிவி கமரா, தொலைக்காட்சிப் பெட்டி, சிகரெட் பெட்டிகள், தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக உரிமையாளரால் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

யாழ் செய்திகள்

காலாவதியான பொருட்கள் விற்பனை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

நாட்டின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளையின் வியாபார உரிமத்தை இரத்து செய்யுமாறு, யாழ்ப்பாண மேலதிக நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி இருந்த…

71 0 0
யாழ் செய்திகள்

யாழில் மின்தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு.!

யாழில் கடந்த பல நாட்களாக விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அல்லல்பட்டனர். குறிப்பாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். இந்த…

97 0 0
யாழ் செய்திகள்

வலி. மேற்கில் போராட்டத்தில் குதித்த மக்கள்.!

வீட்டுத்திட்ட மிகுதி நிதியை வழங்குமாறு கோரி இன்றையதினம் அராலி மத்தி பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின்போது 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு…

117 0 0
யாழ் செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்.!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று வெகு விமர்சையாக ஆரம்பமானது. இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப பூஜை…

62 0 0