உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் 140Kg கஞ்சா திருடிய 4 பேர் கைது

கிளிநொச்சி செய்திகள் 3 ஆண்டுகள் முன்
25 பார்வைகள்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கிராம் கஞ்சாவை திருடிய நால்வர் இன்றையும் தினம் கைது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சான்றுப்படுத்தப்பட்டு பாதுகாப்பு
அறையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து
கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்பு பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உப்புல செனவரத்தினவின் கீழ் இயங்கி வருகின்ற மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரின் பொறுப்பதிகாரி பி.ஐ.மங்கள தலைமையிலான பொலீஸார் இரகசிய தேடுதலை மேற்கொண்டிருந்த வேளையில் இந்
நால்வரும் கைது செய்யப்பட்டனர்.

இதில் ஒருவர் நீதிமன்ற பணியாளர். இருவர் நீதிமன்ற சுத்திகரிப்பு மேற்பார்வையாளர்கள். கைதானவர்களில் மூன்று பேர் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள். கைதான நீதிமன்ற பணியாளர் அம்பாறையை சேர்ந்தவர்.

நீதிமன்ற களஞ்சிய அறையை உடைத்து கஞ்சா திருடி, அதனை விற்பனை செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக பொலிசாரினால் தடுத்து வைக்க கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

இவர்களின் கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

DCB 6

DCB 2 1

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

கிளிநொச்சி செய்திகள்

பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கி சட்டவிரோத மணலை கொண்டு செல்ல முற்பட்ட நபர்கள் கைது.!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட A9 பிரதான வீதியில் பரந்தன் பகுதியில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடியில் இன்று 19.08.2026 பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கி சட்டவிரோத மணலை…

109 0 0
கிளிநொச்சி செய்திகள்

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொண்ட 50 பேருக்கான பூர்வாங்க விசாரணை.!

கிளிநொச்சி காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் மேலும் பதிவுகளை மேற்கொண்ட 50 பேருக்கான பூர்வாங்க விசாரணை கிளிநொச்சி மாவட்ட காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில்…

62 0 0
கிளிநொச்சி செய்திகள்

சேவைச் சந்தை வர்த்தகர்களுக்கான நிதியியல் அறிவு பற்றிய கலந்துரையாடல்.!

கிளிநொச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட சேவைச் சந்தை வர்த்தகர்களுக்கு நிதியியல் அறிவு தொடர்பான கருத்தமர்வு ஒன்று இன்று பிற்பகல் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர்…

75 0 0
கிளிநொச்சி செய்திகள்

பூநகரியில் காற்றாலை அமைக்கும் திட்டம்; பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்ட சிறீதரன் எம்.பி.!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று…

49 0 0