உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
29 செவ்வாய்

கௌதாரி முனை சுற்றுலா முதலீட்டு அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடல்.!

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
144 பார்வைகள்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கெளதாரி முனை சுற்றுலா முதலீட்டு அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், மாகாண காணி ஆணையாளர் இ.குருபரன், பூநகரி பிரதேச செயலாளர் வேல்முருகு ஆயகுலன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண உதவிப்பணிப்பாளர் ஜறவன் தாரகா, வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன், பூநகரி பிரதேச சபைத் தவிசாளர் சிவகுமார் சிறீரஞ்சன், மாவட்டத்தின் துறை சார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள், கெளதாரி முனையில் சுற்றுலா முதலீடு செய்வதற்கு விண்ணப்பித்த முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டமிடலுக்கு அமைய சுற்றுலா முதலீட்டு திட்டங்கள் செயற்படுத்த வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டது.

முதலீட்டாளர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுக்கான இடங்களை தெரிவு செய்வதற்காக பூநகரி பிரதேச செயலாளர் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பத்தேகம துப்பாக்கிச் சூடு – ப@லி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

காலி – பத்தேகமவில் நேற்று (27) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவரும் உயிரிழந்தார். அவர் இன்றிரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

105 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றம் தொடர்பில் அமைச்சர் சந்தன அபயரத்னவிடம் ரவிகரன் எம்.பி முன்வைத்த கோரிக்கை

ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமது சொந்த மாவட்டங்களுக்கு வெளியே தொடர்ச்சியாகப் பணியாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் இடமாற்றக் கோரிக்கைகள், பதிலீட்டு உத்தியோகத்தர்கள் இல்லையென்ற காரணத்தினால் தொடர்ந்தும் நிராகரிக்கப்படக்கூடாது என…

103 0 0
இலங்கை செய்திகள்

திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரிலும் போராட்டம்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மன்னாரில் போராட்டம் ஒன்று இன்று(28) திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.…

108 0 0
இலங்கை செய்திகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மோட்டார் சைக்கிள் பேரணி

‘நாட்டை கட்டியெழுப்பும் இளைஞர் சக்தி’ என்ற தொனிப்பொருளில், நாடு தழுவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சோசலிச இளைஞர் சங்கத்தால் இளைஞர்களை ஒழுங்குபடுத்தி நாட்டிற்கு தேவையான…

105 0 0