உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மூன்று பிள்ளைகளை தாய் மண்ணிற்கு விதையாக்கிய தாய் ஒருவரிற்கு நேர்ந்த அவலம்!

கிளிநொச்சி செய்திகள் 3 ஆண்டுகள் முன்
67 பார்வைகள்
மூன்று பிள்ளைகளை தமிழர் தாயகம் காக்க அர்பணித்த தாயின் இன்றய நிலைமை வெட்கி தலை குனிய வேண்டும் எம் தமிழினம் என கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து முகநூல்வாசி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த தாய் போன்றவர்களுக்கு பாவம் செய்தால் நாங்கள் ஆறு அறிவுள்ள மனிதர்களாக இருக்க முடியாது எனவும் அவர் இடித்துரைத்துள்ளார்.

சம்பவம் குறித்து அவர் தனது பதிவில்,

கிளிநொச்சி பிரதேச சபை தரங்கெட்ட நிர்வாக தலைமையில் இயங்குகிறதா என்ற சந்தேகத்தை இந்த சம்பவம் உருவாக்கியுள்ளது. கிளிநொச்சி முருகன் ஆலையத்திற்கு முன்னால் வீதியோரமாக வியாபாரம் செய்து வரும் இவர் மூண்று மாவீரர்களின் தாய் என என்னிடம் தன்னை பல தடவை வீரமாக அடையாளப்படுத்துவார்.

மூன்று பிள்ளைகளை தாய் மண்ணிற்கு விதையாக்கிய தாய் ஒருவரிற்கு நேர்ந்த அவலம்!
மூன்று பிள்ளைகளை தாய் மண்ணிற்கு விதையாக்கிய தாய் ஒருவரிற்கு நேர்ந்த அவலம்!

இன்று வீதியில் செல்லும் அனைவரிடமும் கை ஏந்தி என்னுடைய கடையை உடைக்க வேண்டாம் என சொல்லுங்கள் “ என்று அழுது புலம்புகிறார் காரணம் அது கிளிநொச்சி பிரதேச்சபைக்கான இடம் என்பதால் உடைத்து எறிகிறார்கள்.

7-10 பிரதேசபை ஊழியர்கள் 4-6 பொலிசார் ஒரு கிராம சேவகர் இனைந்து இதை செய்ய வேண்டும் என்பதற்கு என்ன அவசரம் ? 2017 ற்கு பின் கிளிநொச்சி நகரில் என்ன அபிவிருத்தி நடந்தது எற்று அவர்களிடம் கேட்டால் அவர்களை செருப்பால் அடித்தது போல் இருக்கும் அதனால் அதை விடுவோம்.

பல வியாபார நிலையங்கள் எந்த நிலைமையில் உள்ளது அதற்கான பதிவு பத்திரங்கள் நேர்த்தியாக உள்ளதா என்று உங்களுக்கு நல்லாவே தெரியும் பணம் பலம் ஆள் பலம் உள்ளவர்களிடம் பதுங்கி பம்முவதும் ஏழைகளிடம் சீறி பாய்வதும் உங்கள் கேவலமான ஆளுமையை அப்பட்டமாக காட்டுகிறது.

அந்த தாயின் மூண்று மாவீரரும் உயிருடன் இருந்திருந்தால் இன்று கடையை உடைத்த உங்களின் நிலமை கவலைக்கிடமாக மாறி இருக்கும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

கிளிநொச்சி செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து.!

கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் சேவிஸ் வீதி சந்தியில் மணல் ஏற்றியவாறு, கிளிநொச்சியை நோக்கி வந்த பாரவூர்தி வாகனம் வேறொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது. இதன்போது எதிரே வந்த…

124 0 0
கிளிநொச்சி செய்திகள்

எதிர்வரும் 30ஆம் திகதி கிளிநொச்சியில் அனர்த்த ஒத்திகை.!

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டால் பொது மக்கள், திணைக்களங்கள், தொண்டு நிறுவனங்கள் செயற்படும் விதம் தொடர்பான அனர்த்த ஒத்திகை எதிர்வரும்…

128 0 0
கிளிநொச்சி செய்திகள்

கௌதாரி முனை சுற்றுலா முதலீட்டு அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடல்.!

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கெளதாரி முனை சுற்றுலா முதலீட்டு அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்…

186 0 0
கிளிநொச்சி செய்திகள்

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கச் செய்த பிரதேச செயலகங்கள் கெளரவிப்பு.!

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகம் கிடைக்கச் செய்த பிரதேச செயலகங்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று 26.09.2026 பிற்பகல் 2.30 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.…

125 0 0