உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
28 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்.!

இலங்கை செய்திகள் 43 நிமிடங்கள் முன்
36 பார்வைகள்

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது சந்தையில் கோழி இறைச்சி மேலதிகமாகக் காணப்படுவதால் விலைகள் குறைவடைந்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் கோழி இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான அளவு உற்பத்தி காணப்படுவதாகவும், தேவையான எந்தவொரு அளவையும் சந்தைக்கு விநியோகிக்கும் இயலுமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் மாதத்தில் பண்டிகைக் காலம் காரணமாகக் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அதற்கான போதியளவு குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி கையிருப்பில் உள்ளமையால் விலைகள் பாரியளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அஜித் குணசேகர, முட்டைக்கான கேள்வி அதிகரித்துள்ள அதேவேளை உற்பத்தி குறைவடைந்தமையே விலை அதிகரிப்பிற்குக் காரணம் எனத் தெரிவித்தார்.

கால்நடைத் தீவன உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் சோளத்திற்குத் தட்டுப்பாடு நிலவுவதால் அதற்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்த நேரிட்டுள்ளதாகவும், அந்த மாற்றம் காரணமாக முட்டை உற்பத்தி ஓரளவு குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கோழிப்பண்ணைகளை அண்டிய பகுதிகளில் பல வைரஸ் நோய்கள் பரவியமையும் முட்டை உற்பத்தி வீழ்ச்சியடையக் காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போது முட்டையொன்று 39 முதல் 40 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும், எதிர்காலத்தில் முட்டை விலையானது சந்தையில் நிலவும் கேள்வி மற்றும் நிரம்பலின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் எனவும், குறுகிய காலத்திற்குள் முட்டை உற்பத்தியைக் கணிசமாக அதிகரிப்பது கடினம் எனவும் அஜித் குணசேகர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் முட்டை விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து உறுதியாகக் கூற முடியாது எனவும், அது சந்தையின் கேள்வி மற்றும் நிரம்பலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர,
“பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்கும் என நான் நினைக்கவில்லை. நாட்டின் தேவைக்குப் போதுமான அளவு கோழி இறைச்சி உள்ளது. ஆனால் டிசம்பர் மாதத்தில் அதிக கேள்வி ஏற்படும். அந்த நேரத்திலும் எங்களிடம் குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி இருக்கும் என நான் நினைக்கிறேன். அதனால் விலை பாரியளவில் அதிகரிக்காது.

முட்டைகளுக்குப் பாரிய கேள்வி ஏற்பட்டது. முட்டை உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏனெனில் சோளத் தட்டுப்பாடு காரணமாக அதற்குப் பதிலாக அரிசி போடப்பட்டது. அரிசி போட்டதால் உற்பத்தி சற்று குறைவடைந்துள்ளது. அதேபோல் வைரஸ் நோய்கள் சிலவும் ஏற்பட்டுள்ளன. அதனாலும் உற்பத்தி குறைந்தது.

பொதுவாக நவம்பர் மாதம் வெயில் இல்லாத காலம், மழைக்காலம் என்பதால் அங்கேயும் முட்டை உற்பத்தி குறைந்தது.

தற்போதும் முட்டையொன்று முப்பத்தொன்பது, நாற்பது ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சந்தையின் கேள்விக்கு அமையவே விலை தீர்மானிக்கப்படுகிறது.

எப்படியும் எதிர்காலத்தில் உற்பத்தியை அதிகரித்துக்கொள்ள முடியாது. ஏனெனில் பொதுவாக முட்டை உற்பத்தியை அதிகரிப்பது சற்று கடினம். எனவே, இனிவரும் காலங்களிலும் கால்நடைத் தீவன மூலப்பொருட்களைத் தட்டுப்பாடின்றி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளோம்.

வர்த்தக அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வொன்றைத் தருவார்.

முட்டைக் கைத்தொழில் குறித்து எம்மால் இன்னும் சரியாகக் கூற முடியாது, ஏனெனில் கேள்வி மற்றும் நிரம்பலின் அடிப்படையிலேயே விலை தீர்மானிக்கப்படுகிறது என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரூபன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய…

30 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் பாடசாலை மாணவன் உ**யிரிழப்பு.!

கம்பளை – புஸ்ஸல்லாவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை நகரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாடகை…

31 0 0
இலங்கை செய்திகள்

தென்கொரியாவில் இடம்பெற்ற விபத்து; இலங்கைத் தொழிலாளர்கள் உ**யிரிழப்பு.!

தென்கொரியாவின் கியோங்கி மாகாணம், ஹ்வாசோங் பகுதியில் பணி முடிந்து தங்குமிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் மீது பாரவூர்தி ஒன்று மோதியதில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நவம்பர்…

32 0 0
இலங்கை செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழும், மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழும் இன்று சனிக்கிழமை (28)…

38 0 0