உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
28 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கோர விபத்தில் பாடசாலை மாணவன் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 24 நிமிடங்கள் முன்
31 பார்வைகள்

கம்பளை – புஸ்ஸல்லாவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கம்பளை நகரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாடகை முச்சக்கரவண்டி ஒன்றும், புஸ்ஸல்லாவையிலிருந்து கம்பளை நோக்கிப் பயணித்த மகிழுந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பெற்று வந்த 15 வயதுடைய ஆர். தர்ஷனன் என்ற பாடசாலை மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மகிழுந்து சாரதி கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரூபன பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய…

30 0 0
இலங்கை செய்திகள்

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்.!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில் கோழி இறைச்சி மேலதிகமாகக்…

35 0 0
இலங்கை செய்திகள்

தென்கொரியாவில் இடம்பெற்ற விபத்து; இலங்கைத் தொழிலாளர்கள் உ**யிரிழப்பு.!

தென்கொரியாவின் கியோங்கி மாகாணம், ஹ்வாசோங் பகுதியில் பணி முடிந்து தங்குமிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் மீது பாரவூர்தி ஒன்று மோதியதில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நவம்பர்…

32 0 0
இலங்கை செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழும், மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழும் இன்று சனிக்கிழமை (28)…

38 0 0