உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
28 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

தென்கொரியாவில் இடம்பெற்ற விபத்து; இலங்கைத் தொழிலாளர்கள் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 36 நிமிடங்கள் முன்
29 பார்வைகள்

தென்கொரியாவின் கியோங்கி மாகாணம், ஹ்வாசோங் பகுதியில் பணி முடிந்து தங்குமிடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த இரண்டு இலங்கைத் தொழிலாளர்கள் மீது பாரவூர்தி ஒன்று மோதியதில் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் நவம்பர் 26ஆம் திகதி இரவு சுமார் 9.10 மணியளவில், ஹ்வாசோங் நகரின் ஜங்கான்-மியோன் (Jangan-myeon) பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பணி முடிந்து வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த 30 வயதுடைய இரு இலங்கைத் தொழிலாளர்கள் மீது, 7.5 தொன் எடையுடைய பாரவூர்தி ஒன்று மோதியதிலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.

விபத்து இடம்பெற்றவுடன் இருவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு இலங்கைப் பிரஜைகளின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இவ்விபத்துத் தொடர்பில், பாரவூர்தியைச் செலுத்திய 50 வயதுடைய சாரதிக்கு எதிராகத் தொழில்முறை அலட்சியத்தினால் மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பாரவூர்தி சாரதி மதுபோதையிலோ அல்லது போதைப்பொருள் பாவனையிலோ இருக்கவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து இடம்பெற்ற விதம் மற்றும் அதற்கான காரணங்களைக் கண்டறியும் நோக்கில் சி.சி.ரி.வி காணொளிகள் உள்ளிட்ட ஏனைய ஆதாரங்களைப் பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை தொடர்பில் வெளியான தகவல்.!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது சந்தையில் கோழி இறைச்சி மேலதிகமாகக்…

33 0 0
இலங்கை செய்திகள்

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை.!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டத்தின் கீழும், மாத்தளை, பதுளை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழும் இன்று சனிக்கிழமை (28)…

38 0 0
இலங்கை செய்திகள்

ரி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது.!

பிங்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 52, காலி வீதி பிரதேசத்தில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பிங்வத்தை பிரதேசத்தைச்…

28 0 0
இலங்கை செய்திகள்

நெடுங்கேணி கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்.!

நெடுங்கேணி கோடாலிக்கல்லு துயிலும் இல்லத்தில், நேற்றையதினம் நவம் அன்னையின் சகோதரி மகேஸ்வரி அவர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட, சம நேரத்தில் உறவினர்களால் மாவீரர்களுக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதில்…

31 0 0