உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதிய ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் மீதான முதல் வாக்கெடுப்பு அடுத்த மாதம்

உலக செய்திகள் 41 நிமிடங்கள் முன்
32 பார்வைகள்

ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தம் தொடர்பில் , அடுத்த மாதம் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

வர்த்தகத் தடைகளை நீக்குவதையும், பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய உணவு மற்றும் பான உற்பத்திகள் மீதான பெரும்பாலான சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒப்பந்தங்கள், கடந்த வாரம் நடைபெற்ற இங்கிலாந்து-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட வரைவு மீதான விவாதம், எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி பொதுச்சபையில் நடைபெறவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது .

.பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் , இளைஞர் அனுபவத் திட்டம் உள்ளடக்கப்படாத நிலையில் , அவை நடைமுறைக்கு வருமா என்பது தொடர்பில் பிரதமர் கேள்விகளை எதிர்கொண்டுள்ளார்.

இதேநேரம் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் ஐரோப்பியர்களுக்கான கல்விக் கட்டணம் குறித்த மேலும் ஒரு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,
இந்த விவகாரம் கடந்த வார ஒப்பந்தங்களைத் தடம் புரளச் செய்யலாம் என கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி பேடனோச் ( Kemi Badenoch) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

“ஹசீனாவின் தலைமுடிக்கு சேதம் ஏற்பட்டால் கூட பங்களாதேஷ் அரசாங்கமே பொறுப்பு” : அமெரிக்கா எச்சரிக்கை!

முன்னாள் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் தாய்நாடு திரும்பத் திட்டமிட்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்பு தொடர்பாகப் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கு முன்னாள் பென்டகன் அதிகாரி…

34 0 0
உலக செய்திகள்

‘சவூதி அரம்கோ’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது தாக்குதல்!

சவூதி அரேபியாவின் ஜசான் (Jazan) நகரில் அமைந்துள்ள ‘சவூதி அரம்கோ’ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது, ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல்…

33 0 0
உலக செய்திகள்

குவைத்தில் ஈரானின் ஆளில்லா வானூர்தித் தாக்குதல் – இரு இத்தாலிய தொழில்நுட்பவியலாளர்கள் உயி@ரிழப்பு

குவைத்தில் இன்று நடத்தப்பட்ட ஈரானின் ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் இரண்டு இத்தாலிய தொழில்நுட்பவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவிப்பின்படி, ஈரானைச் சேர்ந்த பல…

32 0 0
உலக செய்திகள்

தாய்லாந்து எரிபொருள் களஞ்சியசாலையில் பாரிய வெடிப்பு

தாய்லாந்தின் தலைநகர் பேங்கொக்கில் அமைந்துள்ள பாங்க்சாக் (Bangchak) எரிபொருள் சுத்திகரிப்பு மற்றும் களஞ்சியசாலையில் இன்று (26) பாரிய வெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த…

33 0 0