ரி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது.!
பிங்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலக்கம் 52, காலி வீதி பிரதேசத்தில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பிங்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய முதியவர் ஆவார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாம் அதிகாரிகள் குழுவினால் நேற்று வெள்ளிக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிங்வத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து ஒரு T-56 ரக துப்பாக்கி, அதற்கான மகசின் ஒன்று, 13 தோட்டாக்கள் மற்றும் 11 பயிற்சித் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பின்வத்தை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


