ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரில் நனைந்தது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்
கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தற்போது பிரதான நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளன.
இதன்போது, உயிர்நீத்த மாவீரர்களுக்கு அவர்களது உறவினர்கள் மௌனமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, மணியோசை எழுப்பப்பட்டு, பிரதான ஈகைச் சுடர் ஏற்றப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து உயிர்நீத்த மாவீரர்களின் உறவுகள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
மாலை 6.05 மணிக்கு பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, உறவுகள் தமது பிள்ளைகளின் நினைவிடங்களில் சுடரேற்றி மலர்தூவி உணர்வுபூர்வமாக அக வணக்கம் செலுத்தினர். துயிலுமில்லம் எங்கும் மக்களின் அழுகுரலும் சுடர்களின் ஒளியும் நிறைந்து காணப்பட்டது.


