உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
27 வெள்ளி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கார்த்திகை 27 – நினைவுகளில் என்றும் வாழும் மாவீரர்களுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி!

இலங்கை செய்திகள் 24 நிமிடங்கள் முன்
38 பார்வைகள்

எமது மக்களின் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களையும், போரின் கோரத்தால் உயிர்நீத்த எமது உறவுகளையும் நினைவுகூரும் புனிதமான கார்த்திகை 27 நினைவேந்தல் நாளில், இன்று (27.11.2026) பாராளுமன்றத்தில் அவர்களுக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் அவர்களுடன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களும் இணைந்து கொண்டு, உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.

உயிர்கள் மண்ணில் புதைந்திருக்கலாம்; ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற நினைவுகளும், தியாகங்களும் எமது இனத்தின் வரலாற்றிலிருந்து ஒருபோதும் மறைந்துவிடாது.

ஒவ்வொரு கார்த்திகை 27ஆம் நாளும் வெறுமனே ஒரு நினைவேந்தல் நாளல்ல; இழந்த உயிர்களை நினைத்து இதயங்கள் கனக்கும் நாள். பிரிந்த உறவுகளின் நினைவுகளால் கண்கள் கசியும் நாள். தியாகங்களின் வலியையும், இழப்புகளின் ஆழத்தையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்லும் நாள்.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், எத்தனை தலைமுறைகள் மாறினாலும், எமது உறவுகளின் நினைவுகள் எம் நெஞ்சங்களில் அணையாத தீபங்களாக என்றும் ஒளிரும்.

விதைக்கப்பட்ட உயிர்கள் மண்ணில் உறங்கலாம்; அவர்கள் விதைத்த நினைவுகள் எம் இதயங்களில் என்றும் வாழும்!

மாவீரர்களுக்கும், உயிர்நீத்த எமது உறவுகள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான வீர வணக்கங்களும் அஞ்சலிகளும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கு வீதிப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வுச் செயலமர்வு

யாழ்ப்பாண மருத்துவச் சபையுடன் இணைந்து வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையானது, வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வுச் செயலமர்வை வடக்கு மாகாண பிரதம…

44 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நாள் நினைவேந்த நிகழ்வானது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் தூபியில் நடைபெற்றது. மூன்று பிள்ளைகளை மண்ணுக்காக வித்தாக்கிய தாயான செல்லத்தம்பி…

34 0 0
இலங்கை செய்திகள்

மாவீரர்களை நினைவுகூர்வது மக்களின் உரிமை; இதில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்..!

கார்த்திகை 27 மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், மாவீரர்களின் தியாகத்தையும் நினைவேந்தல் நிகழ்வுகளையும் அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.…

33 0 0
இலங்கை செய்திகள்

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபா ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா.!

மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஹீனைஸ் நகர் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபா ஜும்ஆ பள்ளிவாசல் புதிய கட்டிட திறப்பு விழா (27) இன்று வெள்ளிக்கிழமை…

46 0 0