உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.!

இலங்கை செய்திகள் 22 நிமிடங்கள் முன்
61 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று நண்பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று முதல் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள மருத்துவர்களின் சம்பள உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது குறைக்கப்பட்ட மேலதிக பணி மற்றும் விடுமுறைக்காலக் கொடுப்பனவுகளை மீண்டும் வழங்க வேண்டும்.

பணியாளர் பற்றாக்குறை
மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய ஆள்தேர்வு செய்ய வேண்டும்.

தங்குதடையின்றி மருந்துகளை வழங்குதல் மற்றும் மருத்துவமனை அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்.

2027 வரவு – செலவுத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த விடுத்த கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காமை உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடுபூராகவும் நேற்று முதல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க வடமாகாண இணைப்பாளர் கதிரமலை உமாசுதன் உள்ளிட்ட வைத்தியர்கள் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஈழத்தமிழன்.!

ஓமானில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த விக்னேஸ்வரன்…

57 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறை நகரில் திடீர் சோதனை; வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு.!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பருத்தித்துறை நகரில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் சோதனை நடவடிக்கையின்போது காலாவதியான அரிசி உள்ளிட்ட பல உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.…

35 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நியமனம் இரத்து.!

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் பதவி நியமனம் மற்றும் அதற்குரிய நேர்காணல் நடைமுறைகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு (Writ…

62 0 0
இலங்கை செய்திகள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விவகாரம்; வைத்தியர் சுகுணனின் பதவி உயர்வுக்கு கண்டனம்.!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பணிக்குச் சென்ற முஸ்லிம் தாதிமார்கள் தலையை மறைத்திருந்தார்கள் எனக் கூறப்பட்டுப் பணியைப் பாரமெடுக்கத் தடை விதிக்கப்பட்டமைக்குக் காரணமானவராகவும், அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவருமான…

70 0 0