உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆட்சியைப் பிடிக்க நாங்கள் வரவில்லை! தமிழ் மக்களின் உரிமைக்காகவே குரல் கொடுக்கின்றோம்!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
73 பார்வைகள்

சமத்துவம் தொடர்பில் பேசும் தற்போதைய அரசு நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சரியான முறையில் கையாள வேண்டும் என்றும், கடந்த அரசுகள் செயற்பட்டதைப் போன்று இந்த அரசும் செயற்படக் கூடாது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“இந்த நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றவோ அல்லது ஆட்சியைப் பிளவுபடுத்தவோ இலங்கைத் தமிழரசுக் கட்சி வரவில்லை. எமது மக்களின் இனப்பிரச்சினைக்கும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும் எதிராகக் குரல்கொடுப்பதற்காகவே தமிழ் மக்கள் எங்களைத் தெரிவுசெய்துள்ளனர்.

தற்போது ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், வெளிநாடுகளிலிருந்தே பால்மா மற்றும் விவசாயப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளிலிருந்து தரமற்ற பால்மாவை இறக்குமதி செய்வதைத் தவிர்த்து, உள்ளூர் பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும்.

மயிலத்தமடு, மாதவனை மற்றும் வட்டமடு ஆகிய பகுதிகளில் மேய்ச்சல் தரைகள் தொடர்பான பிரச்சினைகளால் பண்ணையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்ணையாளர்களின் கால்நடைகள் படுகொலை செய்யப்படுவதுடன், உணவின்றி உயிரிழக்கும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.

மயிலத்தமடு காணிகளை மேய்ச்சல் தரைக்காக விடுவித்துத் தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், கொழும்பு மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களும் உத்தரவிட்டுள்ளன. ஆனால் ஜனாதிபதியின் சொல்லுக்கும் நீதிமன்ற உத்தரவுக்கும் அங்குள்ள அதிகாரிகள் மதிப்பளிப்பதில்லையா என்ற கேள்வி எழுகின்றது.

அண்மையில் பண்ணையாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தபோது, மாவட்ட செயலகத்தில் அரச அதிபரைச் சந்தித்து நிலைமைகளை எடுத்துரைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டது. அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவது மனித உரிமை மீறலாகும்.

அதிகாரிகள் ஜனாதிபதியினதும் நீதித்துறையினதும் உத்தரவுகளைத் துஷ்பிரயோகம் செய்யாமல், பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக உரிய தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் மாபெரும் போராட்டம்! – ஐக்கிய கல்வி ஊழியர் சங்கம் அழைப்பு

அரசின் மக்கள் விரோதச் செயற்பாடுகள், அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகளுக்கு எதிராக நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் அனைத்துச் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை…

80 0 0
இலங்கை செய்திகள்

அநுரவின் வரவு – செலவுத் திட்டமும் பொய்களாலேயே நிரம்பியிருக்கும்!- நாமல் எம்.பி. கடுமையாகச் சாடல்

பொய் கூறுவதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிகவும் வல்லவர் என்றும், விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசின் வரவு – செலவுத் திட்டமும் பொய்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன…

71 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டும் – ஈ.பி.டி.பி வலியுறுத்தல்!

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கான திடமான நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. கட்சி, மாகாணசபை…

67 0 0
இலங்கை செய்திகள்

அமெரிக்காவின் 17 மில்லியன் டொலருக்காக சீனாவின் 392 மில்லியன் டொலரை இழந்தோம்- முஜிபுர் ரஹ்மான் விசனம்!

அரசின் பிழையான முகாமைத்துவம் காரணமாக அமெரிக்காவின் 17 மில்லியன் டொலர் நன்கொடையைப் பெற்றுக்கொண்டு, சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை அரசு இல்லாமலாக்கிக்கொண்டுள்ளது என்று ஐக்கிய மக்கள்…

80 0 0