உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அநுரவின் வரவு – செலவுத் திட்டமும் பொய்களாலேயே நிரம்பியிருக்கும்!- நாமல் எம்.பி. கடுமையாகச் சாடல்

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
70 பார்வைகள்

பொய் கூறுவதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிகவும் வல்லவர் என்றும், விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசின் வரவு – செலவுத் திட்டமும் பொய்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“கப்பலிலிருந்து இறக்கப்படும் விலைக்கே எரிபொருளை வழங்குவோம் என்று ஜனாதிபதி ஆரம்பத்தில் குறிப்பிட்டார். ஆனால், இப்போது அவ்வாறு செய்வது பொருத்தமானது அல்ல என்று கூறுகின்றார். தமது அரசு எந்தவொரு வரியையும் புதிதாக அறவிடவில்லை என்று ஜனாதிபதி கூறினாலும், உண்மையில் அரசு வரிகளையே அதிகரித்துள்ளது. நாட்டில் எரிபொருள், எரிவாயு வரிசைகளைத் தொடர்ந்து தற்போது டின் மீன்களுக்கான வரிசையும் உருவாகியுள்ளது.

பால்மா மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. மக்களுக்கான வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ள போதிலும் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. புதிய முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வருவதாக அரசு  கூறினாலும், உண்மையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறும் நிலைமையே காணப்படுகின்றது.

பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கச் சட்டங்கள் தேவை என்ற போதிலும், பச்சை குத்தியுள்ள மற்றும் தலைமுடி வளர்த்துள்ள இளைஞர்களைத் தன்னிச்சையாகச் சிறையில் அடைக்கச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடாது.

பொலிஸ் நிலையங்களில் இளைஞர்கள் கொல்லப்படுகின்றனர். வீதியில் சென்ற ஓட்டோ மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்துகின்றனர். பொலிஸ் துறை தீவிரமாக அரசியல்மயப்படுத்தப்படுவதாலேயே இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. இவ்வாறான பின்னணியிலேயே அரசின் வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. அதில் எத்தனை பொய்கள் இருக்கப்போகின்றன என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் மாபெரும் போராட்டம்! – ஐக்கிய கல்வி ஊழியர் சங்கம் அழைப்பு

அரசின் மக்கள் விரோதச் செயற்பாடுகள், அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகளுக்கு எதிராக நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் அனைத்துச் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை…

79 0 0
இலங்கை செய்திகள்

ஆட்சியைப் பிடிக்க நாங்கள் வரவில்லை! தமிழ் மக்களின் உரிமைக்காகவே குரல் கொடுக்கின்றோம்!

சமத்துவம் தொடர்பில் பேசும் தற்போதைய அரசு நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சரியான முறையில் கையாள வேண்டும் என்றும், கடந்த அரசுகள் செயற்பட்டதைப் போன்று இந்த அரசும்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டும் – ஈ.பி.டி.பி வலியுறுத்தல்!

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கான திடமான நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. கட்சி, மாகாணசபை…

67 0 0
இலங்கை செய்திகள்

அமெரிக்காவின் 17 மில்லியன் டொலருக்காக சீனாவின் 392 மில்லியன் டொலரை இழந்தோம்- முஜிபுர் ரஹ்மான் விசனம்!

அரசின் பிழையான முகாமைத்துவம் காரணமாக அமெரிக்காவின் 17 மில்லியன் டொலர் நன்கொடையைப் பெற்றுக்கொண்டு, சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை அரசு இல்லாமலாக்கிக்கொண்டுள்ளது என்று ஐக்கிய மக்கள்…

80 0 0