உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
5 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அமெரிக்காவின் 17 மில்லியன் டொலருக்காக சீனாவின் 392 மில்லியன் டொலரை இழந்தோம்- முஜிபுர் ரஹ்மான் விசனம்!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
79 பார்வைகள்

அரசின் பிழையான முகாமைத்துவம் காரணமாக அமெரிக்காவின் 17 மில்லியன் டொலர் நன்கொடையைப் பெற்றுக்கொண்டு, சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டை அரசு இல்லாமலாக்கிக்கொண்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு)ச் சட்டத்தின்கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிப்பு மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

“துறைமுகத்தில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக அரசு அமெரிக்காவிடமிருந்து 17 மில்லியன் டொலர்களை நன்கொடையாகப் பெற்றுக்கொண்டு, அப்பகுதியில் சி.சி.ரி.வி. கமராக்களைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததன் மூலம் சீனாவின் 392 மில்லியன் டொலர் முதலீட்டு வேலைத்திட்டம் எமக்கு இல்லாமலாகியுள்ளது. துறைமுகத்தில் சீனாவின் வேலைத்திட்டத்துக்கு அருகில் அமெரிக்காவின் கமராக்களைப் பொருத்துவதற்கு எடுத்த அரசின் பிழையான முகாமைத்துவமே இதற்கு முழுமையான காரணமாகும்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற ஆசிய ஒலிபரப்புச் சங்கத்தின் மாநாட்டுக்கு  அரசு 10 கோடி ரூபா வழங்கியுள்ளது. ‘இந்த நிதி அரசின் பணம் அல்ல’ என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்தார். அப்படியென்றால், அந்தப் பணத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ஏன் அமைச்சரவைக்கு மகஜர் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்? சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்துக்குச் செலவிடப்படும் நிதி திறைசேரியின் பணமாகும். அது மக்களின் பணமாகும்.

2014ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதாகக் கூறி பஸில் ராஜபக்ஷ அரச நிதியைப் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கில், அவரை உடனே கைது செய்யுமாறு நீதிமன்றம் பகிரங்க உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தது. சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், ஜனாதிபதிக்கும் இந்த உத்தரவு செல்லுபடியாக வேண்டும்.

கொழும்பு – மாளிகாவத்தையிலுள்ள பி.டி. சிறிசேன குரே மைதானத்தில் ஜனாதிபதியின் தலைமையில் கூட்டங்கள் இடம்பெறுவதால், கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி முதல் அந்த மைதானம் மூடப்பட்டுப் பொலிஸ் காவல் போடப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் கால்பந்தாட்டப் பயிற்சிகளை மேற்கொள்வதும், பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதுமான இந்த மைதானம் மூடப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ‘பிரபுக்கள் பாதுகாப்புத் தேவையில்லை’ என்று கூறியவர்கள், தற்போது யுத்த காலத்தில் கூட இல்லாதவாறு பலத்த பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக வெள்ளிக்கிழமை கொழும்பில் மாபெரும் போராட்டம்! – ஐக்கிய கல்வி ஊழியர் சங்கம் அழைப்பு

அரசின் மக்கள் விரோதச் செயற்பாடுகள், அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பொருளாதாரச் சீரழிவுகளுக்கு எதிராக நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் அனைத்துச் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை…

75 0 0
இலங்கை செய்திகள்

ஆட்சியைப் பிடிக்க நாங்கள் வரவில்லை! தமிழ் மக்களின் உரிமைக்காகவே குரல் கொடுக்கின்றோம்!

சமத்துவம் தொடர்பில் பேசும் தற்போதைய அரசு நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சரியான முறையில் கையாள வேண்டும் என்றும், கடந்த அரசுகள் செயற்பட்டதைப் போன்று இந்த அரசும்…

69 0 0
இலங்கை செய்திகள்

அநுரவின் வரவு – செலவுத் திட்டமும் பொய்களாலேயே நிரம்பியிருக்கும்!- நாமல் எம்.பி. கடுமையாகச் சாடல்

பொய் கூறுவதில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிகவும் வல்லவர் என்றும், விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசின் வரவு – செலவுத் திட்டமும் பொய்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வேண்டும் – ஈ.பி.டி.பி வலியுறுத்தல்!

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கான திடமான நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. கட்சி, மாகாணசபை…

64 0 0