ஒருநாள் தரவரிசையில் வரலாற்றுச் சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி !
ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணி வரலாற்றிலேயே முதல் முறையாக 6வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இது அந்த அணியின் இதுவரை இல்லாத மிக உயர்ந்த தரவரிசை நிலையாகும்.
இந்த வளர்ச்சியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையைப் பின்னுக்குத் தள்ளி முதல் 6 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.
அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது மற்றும் சமீபத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் ஸிம்பாப்வே அணிகளுடனான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டமே ஆப்கானிஸ்தான் அணியின் இந்த முன்னேற்றத்திற்குக் முக்கிய காரணமாகும்.
இதேவேளை முதலாவது இடத்தில் இந்தியா அணியும் இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து அணியும், மூன்றாம் இடத்தில் தென்னாப்பிரிக்கா அணியும் தரவரிசையில் உள்ள நிலையில் இலங்கை அணி ஏழாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


