உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உடற்தகுதிச் சோதனையில் ரிசப் பந்த் தோல்வி!

விளையாட்டுச் செய்திகள் 5 மணி நேரம் முன்
74 பார்வைகள்

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் கடந்த 01 ஆம் திகதி நடந்த முதல் பிட்னஸ் சோதனையில் தோல்வியடைந்துள்ளார்.

கடந்த மாதம் ஸ்ரீநகரில் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீருக்கு எதிரான இரானி கிண்ண போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடியபோது அவருக்கு விலா எலும்பில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தார்.

கடந்த அக்டோபர் 23 ஆம் திகதி முதல் பெங்களூரு மையத்தில் பயிற்சி பெற்று வரும் பந்த், தற்போது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளைத் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் முழுமையான உடல் தகுதியை எட்டியுள்ளாரா என்பதை உறுதி செய்வதற்காக பிசிசிஐ மருத்துவக் குழுவினர் வரும் நாட்களில் இரண்டாவது பிட்னஸ் சோதனைக்கு ஏற்பாடு செய்யவுள்ளனர்.

இந்த இரண்டாவது சோதனையில் அவர் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது பிட்னஸ் சோதனையில் பந்த் வெற்றி பெற்றால், நவம்பர் 7 முதல் 10 வரை லிங்கன் நகரில் நடைபெறும் இந்தியா ‘ஏ’ மற்றும் நியூசிலாந்து ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான 3 ஆவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கு எதிரான மூன்று அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளிலும் பந்த் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அவருக்கு மாற்றாக ஜார்க்கண்ட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குமார் குஷாக்ரா அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை ரிஷப் பந்த் இரண்டாவது பிட்னஸ் சோதனையிலும் தோல்வியடைந்தால், நியூசிலாந்துக்கு எதிரான எதிர்வரும் டெஸ்ட் தொடரில் அவரது பங்கேற்பு கேள்விக்குறியாகிவிடும்.
 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் எண்ணம் இல்லை – மொஹமட் அமீர் அதிரடி

பிரித்தானியக் குடியுரிமையைப் பெற்றுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அமீர், எதிர்வரும் ஐபிஎல் (IPL) ஏலத்தில் பதிவு செய்யும் எந்தவொரு எண்ணமும் தனக்கில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.…

85 0 0
விளையாட்டுச் செய்திகள்

போட்டியின் போது எதிர்பாராத மோதல் : ஸ்பானிய காற்பந்து வீரர் ப@லி

ஸ்பெயினில் உள்ள எஸ்டாடியோ ஹெலியோடோரோ ரோட்ரிக்ஸ் லோபஸ் மைதானத்தில் டெனெரிப் மற்றும் எஃப்சி அண்டோரா அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாகச் சென்ற இந்தப் போட்டியின்…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஒருநாள் தரவரிசையில் வரலாற்றுச் சாதனை படைத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி !

ஐ.சி.சி ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் ஆப்கானிஸ்தான் அணி வரலாற்றிலேயே முதல் முறையாக 6வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது அந்த அணியின் இதுவரை இல்லாத…

73 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஃபிஃபா தலைவர் ஜியானியின் அமெரிக்க வரி மிகுதியை இரகசியமாக செலுத்திய ஃபிஃபா அமைப்பு!

சர்வதேச கால்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிஃபாவின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் (Gianni Infantino) அமெரிக்க வருமான வரி பாக்கியான சுமார் 4 மில்லியன் டொலர்களை (இந்திய…

79 0 0