உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
4 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அஸ்வெசும உதவித்தொகை கிடைக்காமல் நூற்றுக்கணக்கானோர் முறைப்பாடு.!

இலங்கை செய்திகள் 45 நிமிடங்கள் முன்
76 பார்வைகள்

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக, மக்களிடமிருந்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அஸ்வெசும திட்டத்தின் கீழ் இலட்சக்கணக்கான மக்களின் நலன்புரி உதவிகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதனை அமைச்சர் மறுத்துள்ளார். எனினும், அரசாங்கம் கூறுவதற்கு மாறாக மாவட்ட மட்டத்தில் நிலைமைகள் காணப்படுவதாக சாணக்கியன் சுட்டிக்காட்டினார்.

அஸ்வெசும உதவித்தொகை கிடைக்காமல் போன நூற்றுக்கணக்கானோர் தனது அலுவலகத்தில் முறைப்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், முன்னர் அஸ்வெசும உதவித்தொகை கிடைக்காத சிலருக்கு தற்போது கிடைத்துள்ளதாகவும், முன்னர் உதவித்தொகை பெற்ற சிலருக்கு தற்போது கிடைக்காமல் போயுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உதவித்தொகை கிடைக்காதவர்கள் தமக்குரிய உதவி கிடைக்க வேண்டும் எனவும், தகுதியற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் கருதுபவர்கள் அது தொடர்பாகவும் பிரதேச செயலாளர் ஊடாக முறைப்பாடுகளைச் செய்ய முடியும் என அமைச்சர் தெரிவித்ததாக சாணக்கியன் குறிப்பிட்டார்.

முறைப்பாடுகள் மூலம் தகுதியானவர்களுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், அஸ்வெசும திட்டம் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற கோர விபத்து.!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அராலிச் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து…

85 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத போ*தைப்பொருள் பறிமுதல்; ஒருவர் கைது.!

இலங்கை கடற்படையினரும் கல்முனை மதுவரித் திணைக்கள அலுவலகமும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டுச் சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக உடைமையில் வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலைக் கலவையினால் தயாரிக்கப்பட்டதாகச்…

80 0 0
இலங்கை செய்திகள்

அநுர அரசின் புதிய சட்டமூலம் அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்.!

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ நாட்டையோ அல்லது மக்களையோ பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை அடக்குவதற்கே வழிவகுக்கும் என்று முன்னாள்…

80 0 0
இலங்கை செய்திகள்

பிரமிட் முறை நிதி நிறுவனத்தை நடத்தி நிதி மோசடி; இருவர் கைது.!

பிரமிட் முறை நிதி நிறுவனமொன்றை நடத்தி பொதுமக்களிடம் இருந்து நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்…

70 0 0