உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
17 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அநுர அரசின் புதிய சட்டமூலம் அராஜக ஆட்சிக்கே வழிவகுக்கும்.!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
117 பார்வைகள்

அரசால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ நாட்டையோ அல்லது மக்களையோ பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை அடக்குவதற்கே வழிவகுக்கும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா சாடினார்.

கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் ‘பயங்கரவாதம்’ என்பதற்குத் தெளிவான மற்றும் முறையான வரைவிலக்கணம் இதுவரை வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அரசு கொண்டுவந்துள்ள 83 பக்கங்களைக் கொண்ட இந்தச் சட்டமூலத்தில் அனைத்து விடயங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

சட்டத்தின் உறுப்புரைகளில் ‘ஏதேனும்’ என்ற சொல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதன் மூலம், அரசுக்கு எதிராக முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருப்பவர்களைப் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களாக வரைவிலக்கணப்படுத்த மறைமுக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார்.

இந்தச் சட்டமூலம் பிரஜைகளின் கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சாசனத்தின் 19ஆவது உறுப்புரையை முற்றிலும் மீறும் வகையில் அமைந்துள்ளது என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், தெளிவான வரையறைகளின்றி ஜனாதிபதி விரும்பும் எந்தவொரு அமைப்பையும் தடை செய்வதற்கு இந்தச் சட்டம் வழிவகுக்கும் என்றும், இவ்வாறான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் நாட்டின் நிலைமை முற்றுமுழுதாக அராஜக நிலைக்குத் தள்ளப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சர்வதேச நீதியை வலியுறுத்தி யாழில் மாபெரும் போராட்டம்.!

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளின்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினரால் சர்வதேச…

57 0 0
இலங்கை செய்திகள்

நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் இலைக்கஞ்சி வழங்கலும்.!

தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில், அராலி மத்திய சித்த மருந்தகத்தில் விழிப்புணர்வுக்…

69 0 0
இலங்கை செய்திகள்

உணவு ஒவ்வாமை; 35 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள், உணவு ஒவ்வாமையால் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்குள்ளான நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வட்டவளை பொலிஸ்…

80 0 0
இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொ**லை.!

நுவரெலியா, வலப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கெட்டிவெல பகுதியில் அயலவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில், நேற்று (16) திங்கட்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை…

85 0 0