ஃபிஃபா தலைவர் ஜியானியின் அமெரிக்க வரி மிகுதியை இரகசியமாக செலுத்திய ஃபிஃபா அமைப்பு!
சர்வதேச கால்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிஃபாவின் (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் (Gianni Infantino) அமெரிக்க வருமான வரி பாக்கியான சுமார் 4 மில்லியன் டொலர்களை (இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய்) ஃபிஃபா அமைப்பு இரகசியமாகச் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2026 உலகக் கிண்ண ஏற்பாடுகளுக்காக புளோரிடாவின் மியாமி நகருக்கு இன்ஃபான்டினோ தனது அலுவலகத்தை மாற்றியபோது, அங்குள்ள ஊழியர்களுக்கான வரிச் சமன்பாட்டுத் திட்டத்தின் (Tax-equalization scheme) கீழ் இந்தத் தொகை கடந்த மூன்று ஆண்டுகளாக (2024, 2025 மற்றும் 2026) ஃபிஃபா நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
எனினும், இத்தகைய சலுகைகள் அமைப்பின் சாதாரண ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்குப் பொருந்துமா என்ற கேள்வியும் தற்பொழுது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், ஃபிஃபாவின் அனைத்து உள் விதிகளும் சட்டங்களும் முறையாகவே பின்பற்றப்பட்டதாக அந்த அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.


